கட்சிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய உறுப்பினர்கள் செயற்படவில்லை - மைத்திரி

By T Yuwaraj

20 Jul, 2022 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் கட்சிகள் எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை  என்பது தேர்தல் பெறுபேறுகளின் மூலம் உணர்ந்கொள்ளலாம்  என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமது கையில் - மைத்திரிபால  சிறிசேன | Virakesari.lk

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற ஜனநாயக ரீதியிலேயே இன்றைய தினம் ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றது.. அதன்படி தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து எமது கட்சியை பலப்படுத்தி பயணிக்க வேண்டும். இப்போது பாராளுமன்றம் ஒருபக்கமும் மக்கள் வேறு பக்கமாகவும் உள்ளனர். இதுவே உண்மை. ஏனெனில் இது மக்கள் எதிர்பார்த்த பெறுபேறு அல்ல.

அத்துடன் புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் எங்களின் கட்சி மாத்திரமன்றி அனைத்து கட்சிகளும் கட்சி எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை என்றே தெரிகின்றது. தேர்தல் பெறுபேற்றின் மூலம் அதனை எமக்கு உணர்ந்துகொள்ளலாம்.

இதேவேளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் நாங்கள் நாட்டுக்காக எந்தவொரு நபருக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39