மக்கள் போராட்டத்தை அடக்க முடியுமானவரையே பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்துள்ளது - விமல் வீரவன்ச

Published By: Vishnu

20 Jul, 2022 | 10:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் அடக்கியது  போன்று தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை அடக்க முடியுமான ஒருவரையே ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்துகொள்ளப்பட்டிருக்கின்றது.

ஆனால் அப்போது சமூக வலைத்தளங்கள் இருந்திருக்கவில்லை என்பதனை புரிந்துகொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என சுயாதீன கட்சிகளின் கூட்டணி எம்.பியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.

அவர் தேசியப் பட்டியலில் ஒன்றரை வருடத்தின் பின்னர் வந்தவர். இறுதியில் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் ஒடுக்கியதை போன்று இப்போதும் செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

ஆனால் அப்போது சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. இதனால் இப்போது ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இந்த நேரத்தில் ஒடுக்குமுறைகளுக்கு செல்லக்கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை எதிர்வரும் காலங்கள் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் காலம் என்பதுடன் ஜனநாயக ரீதியிலான உரிமைகளை ஒடுக்கும் காலமாகவும் அமையும் அதற்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்ருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன ? என கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால் எம்.பிக்கள் அச்சத்திற்கு உள்ளாகினால் எதனையும் செய்ய முடியும் என்பதேயாகும். எம்.பிக்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்கு முதலிடம் என்றால் அதனை முன்னுக்கு வைத்து எதனையும் செய்ய முடியும். 

எனவே நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.  குறிப்பாக ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் ஓர் இரண்டு வாரங்களில் அதனை நாட்டுக்கு கொண்டுவர முடியுமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின்...

2024-05-28 09:15:56
news-image

பசறையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர்...

2024-05-28 09:05:45
news-image

இன்றைய வானிலை 

2024-05-28 07:07:30
news-image

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு...

2024-05-28 06:11:06
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பாரிய...

2024-05-28 06:10:04
news-image

ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார்...

2024-05-28 06:09:07
news-image

அலி சப்ரி ரஹீமுக்கும் புத்தளம் பிரதேச...

2024-05-28 06:00:41
news-image

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின்...

2024-05-28 02:35:28
news-image

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என...

2024-05-28 02:06:22
news-image

தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட...

2024-05-27 18:31:24
news-image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இந்திய...

2024-05-27 22:16:56
news-image

உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பது...

2024-05-27 20:05:29