முன்னாள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி ராம் 6 வருடங்களின் பின் விடுதலை 

Published By: Vishnu

20 Jul, 2022 | 09:49 PM
image

(கனகராசா சரவணன்) 

கடந்த 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின்; அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி ராம் மீண்டும்  2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  நிலையில் 20 ஆம் திகதி புதன்கிழமை 6 வருட தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 மே 19 யுத்தம் மௌனித்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டுவந்தார். 

இந்த நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும்  சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில்  முன்னாள் விடுதலைப் புலிகளின்; அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி ராமை தம்பிலுவில் வைத்து பயங்ரவாத தடுப்பு  பிரிவினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  கைது செய்து விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவரை தொடர்ந்து  வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரை பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட 6 வருடகால தண்டனைக்காலம் முடிவுற்ற நிலையில் 19 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை அவரை மட்டக்களப்பு நீதிமன்றில் விடுதலை வழங்கப்பட்டு அவரை விடுதலை செய்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 16:58:42
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08