ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் உள்ளடக்கிய தேனுடன் எள்ளை கலந்து தினமும் சாப்பிடும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்திற்கு உறுதி அளித்து, உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

பெண்கள் இதனை தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம்.

உங்கள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவதோடு, எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க உதவும். மேலும், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இக்கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பாக செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.