(எம்.எம்.சில்வெஸ்டர்)
கியூ. ஆர். குறியீடு முறையை அமுல்படுத்தப்படுத்தி கையடக்கத் தொலைபேசிகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்வது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதுடன், நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் காப்பீட்டுத் தொகை நீக்கப்படும் என காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.
நாட்டின் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களிலும் 21 ஆம் திகதி முதல் கியூ. ஆர். குறியீடு மூலமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியுமென கூறப்பட்டிருந்தது.
எனினும், தற்போது காப்பீட்டுத் தொகையை பெறுவதில் சிக்கல் இருப்பதாக காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமையினால், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அச்சம் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு நடவடிக்கைகளையும் நடைமுறையில் அமுல்படுத்த முடியாது எனவும், அதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொள்வது குறித்தும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதேவேளை, கியூ.ஆர். குறியீடு மற்றும் வாகனப் பதிவு இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் மூலமான எரிபொருள் வழங்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM