தெரணியகலை சப்புமல்கந்த தோட்டம் இறப்பர் பிரிவில் வசித்துவந்த 41 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான டி. தங்கராஜா என்பவர் விறகு வெட்ட சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு வெட்டச் சென்ற குறித்த நபர் இரண்டு தினங்களாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை. 

இரண்டு நாட்கள் குடும்பத்தாரும் பிரதேசவாசிகளும் தேடிய போதும் நேற்று காலை சப்புமல்கந்த இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.