தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது ஆதரவை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பாராளுமன்றில் இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவிற்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவை வழங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது ஆதரவை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் விக்கினேஸ்வரன் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM