கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு  நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது 5 பவுண்  தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த  ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமாா் 10 ஆயிரம் வரை பணம் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும் ஆலய நிா்வாகம் சந்தேகிக்கிறது.

இது தொடா்பில் கிளிநொச்சி பொலிஸாா் சம்பவ இடதிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

- நிபோஜன்