முதலாவது டெஸ்ட்டில் வெற்றி பெறப்போவது யார் இலங்கையா ? பாகிஸ்தானா ?

Published By: Vishnu

19 Jul, 2022 | 07:25 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 342 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், இன்று செய்வாய்க்கிழமை 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்   3 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியில் வெற்றி பெறுவதற்கு    பாகிஸ்தானுக்கு மேலும் 120 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன் இலங்கை 7 விக்கெட்களை வீழ்த்தவேண்டியுள்ளது.

இதன் காரணமாக போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை காணப்படுகிறது. எனினும் இலங்கை பந்துவீச்சாளர்கள் அதிசயம் நிகழ்த்தினாலன்றி பாகிஸ்தானின் வெற்றி தவிர்க்க முடியததாகிவிடும்.

ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் அணித் தலைவர் பாபர் அஸாம் பெற்ற அரைச் சதமும் இலங்கை பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

போட்டியின் 4ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை தனது முதல் இன்னிங்ஸை 329 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கை, மெலும் 8 ஓட்டங்களை   பெற்று மொத்த எண்ணிக்கை 337 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி வீரர் பிரபாத் ஜயசூரியவின் விக்கெட்டை இழந்தது.

இப் போட்டியில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த  தினேஷ் சந்திமால் துரதிர்ஷ்டவசமாக சதம் குவிக்க முடியாமல் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நவாஸ் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் யாசிர் ஷா 122 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 342 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஆரம்ப வீரர்களான அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால், இமாம் உல் ஹக் (35), அஸார் அலி (6) ஆகிய இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களாக இருந்தது.

ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்குடன் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பாபர் அஸாம் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டமிழந்தார்.

104 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அஸாம் 4 சிக்ஸ்கள், ஒரு சிக்ஸுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 22ஆவது அரைச் சதமாகும்.

சுமார் 330 நிமிடங்கள் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய அப்துல்லா  ஷபிக்   289 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அப்துல்லா ஷபிக் பெற்ற 2ஆவது சதம் இதுவாகும்.

மொஹமத் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 76 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 222 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 218 ஓட்டங்களையும் பெற்றன. 2ஆது இன்னிங்ஸில் இலங்கை 337 ஓட்டங்களைப் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20