இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜேம்.என்டர்ஸனும் பிடித்துள்ளனர்.