டலஸ் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை பெறுவது உறுதி - சன்ன ஜயசுமன

Published By: Vishnu

19 Jul, 2022 | 09:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரைஹஷான்)

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை டளஸ் அழகப்பெரும  பெற்றுக் கொள்வார். அந்த வகையில் அவர் நூற்றுக்கு 50 வீதத்துடன் மேலும் 20 அதிக வாக்குகளை பெற்றுக் கொள்வார் என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன  நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் அவரிடம் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்புவதற்குமான வேலைத் திட்டம் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற வளாகத்தில் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியே நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைக்கு முக்கிய   காரணம். நாட்டில் அரசியல் ஸ்திர த் தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய தேவையாக உள்ளது.

வேறு விடயங்கள் தொடர்பில் அதன் பின்னர் கவனம் செலுத்த  முடியும்.

நாட்டில் கடந்த ஒன்றரை வருட காலமாக ஊழல் மோசடிகள் அற்ற அரசாங்கத்தை

அமைப்பதற்கான வேலைத் திட்டம் அவசியம் என்பது தொடர்பிலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இடம்பெறும் நடவடிக்கைகளை பார்க்கும் போது நாம் நாட்டடை டளஸ் அழகப்பெருமவிடமா  அல்லது ரணில் விக்ரமசிங்கவிடமா ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பில் கவனிக்க வேண்டியுள்ளது. ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்படாத ஒருவராக நாம் டளஸ் அழகப்பெருமவை  பார்க்க முடியும்.

அதற்கிணங்க பாராளுமன்றத்தில் உள்ள புதிய உறுப்பினர்கள் பெரும்பாலானோர் டளஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். 

அடுத்து வரும் ஒரு வருட காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி  நாட்டை பொருளாதாரத்தில் கட்டி யெழுப்புவதற்கான வேலைத்திட்டம் டளஸ்  அழகப்பெருமவிடம் உள்ளது. அது தொடர்பில் அவர் எம்மிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்கிணங்க செயல்படுவதற்கே நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். எனவே ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை டளஸ் அழகப்பெரும  பெற்றுக் கொள்வார். அந்த வகையில் அவர் நூற்றுக்கு 50 வீதத்துடன் மேலும் 20 அதிக வாக்குகளை  பெற்றுக் கொள்வார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19