எனது முயற்சி வெற்றியளித்துள்ளது ; ரவூப் ஹக்கீம் பெருமிதம்

Published By: Vishnu

19 Jul, 2022 | 09:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்.இராஜதுரைஹஷான்)

மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற டளஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் உடன்பாட்டுக்கு வரவேண்டும்  என நான் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தேன்.

தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. சஜித் பிரேமதாசவின் பின்வாங்கியதாக யாரும் நினைக்கக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித்தலைவர் அர்ப்பணிப்பு செய்துள்ளார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து  உடனடியாக நாட்டை அமைதிப்படுத்த வேண்டும்.

நாடு குறித்து சிந்தித்து ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக உடன்பாடொன்றுக்கு வரவேண்டும் என ஆரம்பமுதல் கோரிவந்தேன்.

சஐித்பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கமொன்றை உருவாக்கவும் குறுகிய காலத்தினுள் 19 ஆவது திருத்தத்தை ஒத்த யாப்பு திருத்தத்தை முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டை மீட்பதற்கு எம்மால் முடிந்த உச்ச அர்ப்பணிப்பை மேற்கொள்வோம்.

தனிநபர் குறித்து சிந்திக்காமல் உடன்பாடொன்றை எட்டி ராஜபக்‌ஷ யுகமொன்று மீண்டும் உருவாகாதாவாறு செயற்பட இனக்கம் காணப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவரின் அர்ப்பணிப்பை வரவேற்க வேண்டும்.

சஜித் பிரேமதாஸ பதவி பெற பின்வாங்கியதாக யாரும் கருதக் கூடாது. இவ்வாறான உடன்பாடொன்றை எட்ட நான்  ஆரம்பமுதல் போராடினேன். குரல் கொடுத்தேன்.

அது வெற்றியளித்துள்ளது. கட்டமைப்பு மாற்றம் தொடர்பான போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைய நாமும் மாற்றம் அமைப்பதற்கான பொறிமுறை ஒன்று அமைக்கப்படும். போராட்டக்காரர்களின் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கவும் அவகாசம் வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58