இன்றைய வாக்கெடுப்பை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய ஒத்துழையுங்கள் - அனைத்து கட்சிகளிடமும் சபாநாயகர் வேண்டுகோள்

By Digital Desk 5

19 Jul, 2022 | 09:43 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெறும் வாக்கெடுப்பினை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது மேற்கண்டவாறு  வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைக்கமைய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்ய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சகல நெருக்கடிகளுக்கும் ஜனநாயக வரைபிற்குட்பட்ட வகையில் திPர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றியை வேண்டும் என சபாநாயகர்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெறும் வாக்கெடுப்பில் தெரிவத்தாட்சி அலுவலராக பணிபுரியவுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரைக்கமைய வாக்கினை பதிவு செய்தல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வினை எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கும்,தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவும் அப்பிரரேரணையை சபைக்க சமர்ப்பிக்க பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பிலான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05