(எம்.ஆர்.எம்.வசீம்.இராஜதுரைஹஷான்)
மக்கள் போராட்டத்தின் வெற்றி சர்வ கட்சி அரசாங்கம் அமைவதிலேயே தங்கியுள்ளது, டளஸ் அழகப்பெருமவுடனேயே பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அதன் மூலம் சர்வ கட்சி அரசாங்கம் அமைவதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்
பாராளுமன்ற வளாகத்தில் (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக நாட்டு மக்கள் அரசியல், கட்சி பேதமின்றி வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ் என அனைவரும் வெளியேற நேர்ந்தது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் மூன்று அமைச்சரவைகளை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவை பாராளுமன்றத்திற்குள் நாம் மேற்கொண்ட போராட்டங்கள் அல்ல. பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மேற்கொண்ட போராட்டம். 225 பேரும் தேவையில்லை என மேற்கொள்ளப்பட்ட போராட்டம்.
அதில் ஒன்றுதான் ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்பது. அவர் கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தோல்வி கண்டவர். அவருக்கு ஜனாதிபதியாக வருவதற்கான மக்கள் ஆணை கிடையாது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
அத்துடன் அவர் இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர். அவரது செயற்பாடுகளும் தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணம் என்பதும் மக்கள் தெரிவிக்கும் கருத்து.
இத்தகைய பின்னணியில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றையே மக்கள் கோருகின்றனர். தற்போது மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதில் அனுர குமார திசாநாயக்க நேற்று கருத்து தெரிவிக்கும் போது நியமிக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பொதுஜன பெரமுன டளஸ் அழகப்பெருமவை தெரிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவரின் பெயரை முன்மொழிந்துள்ளதுடன் பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ எல்.பீரிஸ் அவரை வழிமொழிந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசனின் கட்சி, விமல் வீரவன்சவின் கட்சி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுயாதீன குழுக்கள் ஆகியனவும் டளஸ் அழகப்பெருமவுடனேயே உள்ளன.
எனவே டளஸ் அழகப்பெருமவுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னும் ஒரே ஒரு கட்சி மட்டுமே அவருக்கு தேவைப்படுகிறது. அது ஜே.வி.பி மட்டுமே. அந்தக் கட்சியும் அமையும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM