குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்களை அமைக்கவில்லை : புனர்நிர்மாணமே நடைபெறுகிது : தொல்லியல் திணைக்களம் நீதிமன்றில் தெரிவிப்பு : உண்மையை ஆராய நீதிபதிகள் குருந்தூர் மலைக்கு விஜயம்

Published By: Vishnu

19 Jul, 2022 | 05:33 PM
image

கே .குமணன் 

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று குறுந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த கட்டுமானங்களை அகற்றுமாறும் அதனை அகற்றியபின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தொல்லியல் சின்னங்களை உரியவாறு பாதுகாக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தது. 

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து 19 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

கௌரவ நீதவான் ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்றுவரும்  இன்றைய வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் ஆஜராகியிருந்தார் . அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.  

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய  நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார். 

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று  2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு தற்போது கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53