உணவும், ஊட்டச்சத்தும்

By Digital Desk 5

19 Jul, 2022 | 07:20 PM
image

குழந்தைகளின் நிறை உணவிற்கு விட்டமின்கள் மிகவும் அவசியம். ஆகவே இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

 

தாணியம்: இரண்டு வயது நிறம்பிய குழந்தைக்கான உணவு பட்டியலில் தாணியங்கள் சேர்க்கப்பட வேண்டும், இதனால் உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். தாணியங்களில் பல வகைகள் இருக்கிறன. எனினும் இவற்றில் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும். 

பால் பொருட்கள்: பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கல்சியம் நிறைந்தவை. கல்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. 

கெரட்: கெரட் ‘விட்டமின் ஏ’ நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரைகள் மற்றும் காய்கறிகளிலும் விட்டமின் ஏ அதிகமாக உள்ளன. இவற்றையும் குழந்தைகளின்; உணவில் சேர்ப்பது அவசியமாகும். 

ஆசைவ உணவுகள்: அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளன. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது. 

மீன்: அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. 

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை மற்றும் ஒரெஞ்ச் ஆகியவை விட்டமின் சி உள்ளடங்கியுள்ளன. விட்டமின் சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் விட்டமின் சி உள்ளது. 

வாழைப்பழம்: மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. 

விட்டமின் டி: இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right