ஜனாதிபதி தெரிவில் பிராந்திய – பூகோள அரசியல்

Published By: Vishnu

19 Jul, 2022 | 03:10 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் தேசிய அரசியல் நகர்வுகள் மற்றும் மாற்றங்கள் பிராந்திய அரசியலிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதற்கு பிரதான காரணம் அதிகாரம் தொடர்பாக பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போட்டி தன்மையாகும். இலங்கையின் ஆட்சி மாற்றங்கள் உள்நாட்டு விவகாரங்கள் என்றாலும் தமது நலன்களுக்கு எதிரான சூழல் ஏற்படாமலும் கூடியளவில் ஒத்திசைவான ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்த அமைதியான இராஜதந்திர பணியில் பலவந்த நாடுகள் ஈடுப்படும். நாட்டின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார – அரசியல் நிலைமைகளில் பிராந்திய – பூகோள அரசியலின் பிரதிப்பளிப்புகளை காண முடிகிறது.

கொவிட் -19 பேர்தொற்றின் முடக்கத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் நிலைகள் அனைத்தும் ஆட்டம் கண்டது. தேசிய வருமானம் கேள்விக்குள்ளானதால் அந்நிய செலாவணி இருப்பும் மெதுவாக வீழ்ச்சியடைய தொடங்கியது. இந்த இரு விடயத்தையும் கையாள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷவின் அரசு தவறியது. எனவே தான் நிலைமை படுமோசமானது. அமைதி வழி மக்கள்  போராட்டங்கள் வன்முறையாக மாற்றமடைந்து ஜனாதிபதி மாளிகை உட்பட அரசாங்கத்தின் முக்கிய மர்ம ஸ்தானங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானர்து. இதனை தொடர்ந்தே கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச்சென்று தனது இராஜினாமா கடிதத்தையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும மற்றும்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி) அநுரகுமார திசாநாயக  ஆகிய மூவரும் வேட்பு மனு தாக்கல் செய்து பாராளுமன்றத்தில் இடம்பெறக்கூடிய ஜனாதிபதி தெரிவுக்கு போட்டியிட உள்ளமையை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த மூன்று வேட்பாளர்களில் யாரால்?  நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்பது அனைத்து தரப்பினராலும் வைக்கப்படுகின்ற பொதுவான கேள்வியாகின்றது. ஆனால் அதற்கு அப்பால் உலக அரசியல் விடயங்களை சுட்டிக்காட்டியும் பல அரசியல் கட்சிகள் மட்டத்தில் கருத்துக்கள் பரப்படுகின்றன.

ஊதாரணமாக திறந்த பொருளாதார கொள்கையே நாட்டின் தற்போதைய அழிவுக்கு காரணம் எனவும் அவ்வாறு கொள்கையுடையவர் ஜனாதிபதிக்கு வர கூடாது. அதே போன்று அவ்வாறா ஒருவர் வந்தால் எம்.சி.சி. மற்றும் சோபா போன்ற அமெரிக்க இராணுவ திட்டங்கள் நாட்டிற்கு கொண்டுவர்ப்படலாம் என்று டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் தரப்பினர் கூறுகின்றனர். மறுப்பும் தேசியமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை நோக்கியே செல்ல வேண்டும் என்றும் அதனை மையப்படுத்திய திட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என அநுரகுமார திசாநாயக தரப்பினர் கூறுகின்றனர். 

 ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைகள் தாராளவாத அல்லது திறந்த பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே இருந்துள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவில் போட்டியிடும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்புகள் தற்போதைய நெருக்கடிக்கான அவசர தீர்வுகளை மையப்படுத்தியதாகும்.

இந்த கொள்கைகளுடன் தொடர்புடைய பிராந்திய – பூகோள அரசியல் பாராளுமன்றத்திற்குள் நடக்கும் ஜனாதிபதி தெரிவில் தாக்கம் செலுத்துகின்றதா என்ற ஐயப்பாடு பொதுவாகவே காணப்படுகின்றது. ஏனெனில்  இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் ஆதிக்க போட்டி தீவிரமடைந்துள்ளது.

அதே போன்று  பலவந்த நாடுகளின் ஆதிக்க இலக்குகளாக இலங்கை உட்பட  தெற்காசிய நாடுகள்  பலவும் உள்ளன. அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆர்வங்கள் பிராந்திய – பூகோள அரசியல் நலன்களுடன் ஒன்றிணைந்தவையாகும்.  எனவே இந்த நாடுகளின் பொதுவான இராஜதந்திர மறுபுகள் ஒத்திசைவான ஆட்சியை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்டே செயற்படும்.

எனவே இலங்கை என்பது பிராந்தியத்தில் முக்கிய செல்வாக்கை செலுத்தக் கூடிய கேந்திர நிலையமாகும். இந்தியவை பொறுத்த வரையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இலங்கை முக்கியமாகின்றது. சீனாவிற்கோ தனது ஒரு மண்டலம் ஒரு பாதை முன்முயற்சி கொள்கை திட்டத்திற்கும் பிராந்தியத்தில் செல்வாக்கை அதிகரிக்கவும் முக்கியமாகின்றது. இவ்வாறு இலங்கை மீது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு நாடுகளுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அமையலாம். ஆவை இலங்கையின் நலன்களை விட பிராந்திய – பூகோள அரசியல் நலன்களை கொண்டவையாகவே இருக்கும். அந்த வகையில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஜனாதிபதி தெரிவில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் குறித்து இந்த நாடுகள் ஆர்வம் செலுத்தும் என்பதை மறுக்க இயலாது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04