கற்பூரவல்லி இலையின் மருத்துவ பயன்கள்!

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 07:16 PM
image

கற்பூரவல்லி இலைசாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்து பருக, உடல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வீட்டு வைத்தியத்தில் தடிமன், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1ஃ2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். 

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது கற்பூரவல்லி இலையின் சாற்றை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவலாம். நல்ல பலன் தரும்.

கற்பூரவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு சமிபாடு சிக்கல் நீங்கும்.

சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right