சீனாவின் சாங்காய் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரு  விமானங்கள் மோதவிருந்த கோர விபத்தை தடுத்த சீன விமானிக்கு, குறித்த விமான சேவை நிறுவனம் இலங்கை ரூபாயில் 6 கோடி 65 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சாங்காய் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எயார்பஸ் 320 மற்றும் சாங்காய் விமானத்தில் தரையிறங்கிய எயார்பஸ் 330 ஆகிய இரண்டு விமானங்களுக்கு ஒரே நேரத்தில் ஓடுபாதையில் குறுக்கிட்டதனால், விமான நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

குறித்த நேரத்தில் எயார்பஸ் 320 மற்றும் எயார்பஸ் 330 அகிய விமானங்களில் பயணிகள் மற்றும் விமான சேவையாளர்கள் என 439 பேர்  இருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எயார்பஸ் 320 செக்கனுக்கு 240 கிலொமீற்றர் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட எயார்பஸ் 320 இன் விமானி ஈ செவோ இரு விமானங்களுக்கிடையில் 19 மீற்றர் (62 அடி) இடைவெளியிருக்கையில் விமானத்தை வானத்தை நோக்கி சேலுத்தினார்.

எயார்பஸ் 320 இன் விமானி ஈ செவோவின் செயலால்  439 பேர் காப்பாற்றப்பட்டனர்.