உருவப் பொருத்தம் இல்லையோ!

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 01:39 PM
image

கேள்வி: நான் 20 வயதுப் பெண். எனது காதலருக்கும் 20 வயது. அவர் கொஞ்சம் பருமனாகவும் கறுப்பாகவும் இருப்பார். நான் நேர்த்தியாக ஆடை அணிகலன்கள் அணிந்து பழகிவிட்டேன். ஆனால், அவர் எப்போதும் பெரிய பெரிய சட்டைகளையே அணிந்துகொள்வார். இவை அனைத்தும் சேர்ந்து எனக்கும் அவருக்கும் உருவப் பொருத்தம் இல்லாதது போல் காட்டுகிறது. இதற்கு நான் என்ன செய்வது? 

பதில்: நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் காதலர்தான் செய்ய வேண்டும்.

கறுப்பாக இருந்தாலும் பலர் கச்சிதமான முகவெட்டு உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் காதலரும் அவ்வாறானவரே என்று நம்புவோம். 

அவரிடம் உள்ள பிரச்சினை அவரது உடற்பருமனும் ஆடைத் தெரிவும்தான் அல்லவா? இதை அவர் உணர்ந்து முயற்சித்தாலே மாற்றங்களை கொண்டுவர முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரையில், பருமனாக இருந்தாலும் கட்டுடலுடன் இருந்தால், அது ஒரு தனி கம்பீரம்தான். எனவே, இருக்கவே இருக்கிறது ~ஜிம்|! அவரை அங்கு சென்று தனது உடலை கச்சிதமாக மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள்.

ஆடைத் தெரிவு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வசப்படாது. ஆனால், உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. எனவே, அவருக்கான ஆடைகளை நீங்களே தெரிவு செய்யுங்கள். இதன் மூலம் அந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

இன்னும் என்ன பிரச்சினை?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right