டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் சிபி சத்யராஜின் 'வட்டம்'

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 01:41 PM
image

'மாயோன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படமான 'வட்டம்', பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மதுபான கடை' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வட்டம்'. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி மற்றும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன், சைத்ர ரெட்டி, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். 'சூது கவ்வும்' பட புகழ் ஸ்ரீனிவாஸ் கவிநயம் கதை திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத நான்கு பேருடைய வாழ்க்கையில், இருபத்திநான்கு மணி தியாலத்திற்குள் ஏற்படும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்களும் தான் 'வட்டம்' படத்தின் திரைக்கதையாக உருவாகி இருக்கிறது.''என்றார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஓ2' எனும் திரைப்படத்தை நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு வெற்றியை பெற்ற தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், அதனை தொடர்ந்து சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வட்டம்' எனும் படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுகிறது. சிபி சத்யராஜின் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08