வீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் வருடாவருடம் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்படும் எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ( EPL) நாளை இடம்பெறவுள்ளது.

வீரகேசரி நலன்புரி சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா - 2016 க்கான சுற்றுப் போட்டிகள் கொழும்பு -14 கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆண்கள் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில்நாதன் தலைமையில் கிரிக்கெட் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இக் கிரிக்கெட் திருவிழாவில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் போன்றன இடம்பெறவுள்ளன.

இப் போட்டியில் 8 ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் இரு மகளிர் கிரிக்கெட் அணிகளும் இரு மகளிர் கூடைப்பந்தாட்ட அணிகளும் கலந்து கொண்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

7 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்குபற்றிவிளையாடவுள்ளன.

விடிவெள்ளி ஸ்டார்ஸ், ஒன்லைன் கிளடியேற்றர், சியதெஸ இலெவன், மித்திரன் இலவென், ஜீனியர்ஸ் ஹிற்றர்ஸ், மெற்ரோ கிங், சன்பிளவர் ஸ்மாஷஷ், கேசரி ஸ்ரைக்கர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

ரோயல் செலன்ஜர்ஸ் மற்றும் சுப்பர் செலன்ஜர்ஸ் ஆகிய இரு மகளிர் கிரிக்கெட் அணிகளுகம் பையரிங் ஏஞ்ஞல்ஸ் மற்றும் ஸ்பைசி ஏஞ்ஞல்ஸ் ஆகிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணிகளும் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.