ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவையா?

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 07:07 PM
image

ஒவ்வொரு நபருக்கும் வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் பாலினத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அமெரிக்காவின் நெஷனல் லைப்ரரி ஒப் மெடிசின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆண்களை விட பெண்கள் 11 நிமிடம் கூடுதலாக தூங்குகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

அந்த ஆய்வின் படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம். மேலும் பெண்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். கர்ப்ப காலத்தில், கால் வீக்கம் சார்ந்த பிரச்சினையை அனுபவிக்கிறார்கள். இதுவும் சில நிமிடங்கள் கூடுதலாக தூங்குவதற்கு வழிவகுக்கிறது.

பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹோர்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.

கர்ப்ப காலத்தில், ஹோர்மோன் மாற்றங்கள் கடுமையாக நிகழும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வீக்கம், வலிகள் ஆகியவை பொதுவானவை. இவையும் தூக்கத்தை பாதிக்கும். இதேபோல் மாதவிடாய் காலத்தில் பகலில் உடல் சூடு, இரவில் வியர்வை வழிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுவும் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது அவரது வயதைப் பொறுத்தது. புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும். ஆனால் வயது அதிகரிக்கும்போது தூங்கும் கால அளவு படிப்படியாக குறையும். பொதுவாக குழந்தைகள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மொய்ஸ்சுரைசர்

2023-03-17 14:59:33
news-image

எந்த காலமானாலும் சரி எந்த யுகமானாலும்...

2023-03-01 14:36:43
news-image

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

2023-02-10 13:04:52
news-image

உங்கள் சருமத்துக்கேற்ற பவுண்டேஷனை தெரிவு செய்யும்...

2023-02-03 17:21:13
news-image

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

2023-02-02 17:21:04
news-image

இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய...

2023-02-01 16:08:50
news-image

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலி

2023-01-28 12:07:36
news-image

முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

2023-01-27 16:04:55
news-image

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்

2023-01-26 17:25:55
news-image

சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி?

2023-01-26 12:40:30
news-image

மாதாந்திர வலி

2023-01-25 17:23:18
news-image

முக அழகு அதிகரிக்கும் புருவங்கள்

2023-01-25 12:51:53