இத்தாலியிலுள்ள எரிமலையொன்றின் உச்சியில் செல்பீ எடுக்க முயன்ற அமெரிக்க உல்லாசப் பயணியொருவர், எரிமலைக் குழிக்குள் தவறி வீழ்ந்ததால் காயமடைந்துள்ளார்.
23 வயதான மேற்படி இளைஞர் தனது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, இத்தாலியின் பிரச்சித்தி பெற்ற வசூவியஸ் எரிமலையையும் பார்வையிடச் சென்றார்.
4,000 அடி உயரமான இந்த எரிமலையின் உச்சிக்கு ஏறியதும், செல்பீ படம் பிடித்துக்கொள்ள மேற்படி இளைஞர் முற்பட்டார்.
இதன்போது, அந்த இளைஞரின் தொலைபேசி கையிலிருந்து நழுவி எரிமலைக் குழியின் விளிம்பில் வீழ்ந்தது.
அப்போது, தொலைபேசியை எடுப்பதற்காக கீழிறிங்கிய இளைஞர், நிலை தடுமாறி அவர் பல அடி தூரம் எரிமலை குழிக்குள் வீழ்ந்தார் என இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எரிமலைக் குழிக்குள் இளைஞர் வீழ்ந்ததைக் கண்ட உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் உதவிக்கு விரைந்தனர்.
பின்னர் பொலிஸாரும் அங்கு வந்ததுடன், ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதேவேளை, மேற்படி குடும்பத்தினர் தடைசெய்யப்பட்ட பகுதியொன்றுக்கு ஊடாக எரிமலை உச்சியை அடைந்துள்ளனர் என இத்தாலிய சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிக ஆபத்தானது என்பதால் தடைசெய்யப்பட்டுள்ள பகுதிக்குள் பிரவேசித்தார்கள் என இக்குடுமப்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்ட்டுள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM