திரையுலகில் DSP என்றால் அனைவருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தைத்தான் குறிக்கும் என்று தெரியும். அமெரிக்காவில் நடத்திய இசைநிகழ்ச்சியை சில வணிக வளாகங்களில் உள்ள படமாளிகையில் ஒளிபரப்பி வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டவர். சிங்கம் 2, வீரம், புலி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர். பாடலாசிரியர், நடனம் ஆடக்கூடியவர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்ற பன்முகத்திறமையுடன் வலம் வரும் இவர் விரைவில் திரையிலும் நாயகனாக அறிமுகமாகவிருக்கிறாராம்.

இந்நிலையில் இவரின் பன்முகத்திறமையில் மேலும் ஒரு முகம் இணையவிருக்கிறது. தலஅஜித்குமாரின் பொழுதுபோக்குகளில் ஒன்றான போட்டோகிராபியில் இவருக்கும் அளவற்ற ஆசையிருக்கிறது. இதை மெய்ப்பிப்பது போல் அண்மையில் இவர் நடிகை வேதிகாவை பல கோணங்களில் வித்தியாசமாக படம் எடுத்திருக்கிறார். அந்த படத்தைப் பார்த்த அனைவரும் DSPயான தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டியிருக்கிறார்கள்.

இவர் தற்போது தமிழில் எந்த புதிய படத்திற்கும் இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்