பிரிட்டனையும் பிரான்சையும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையைச் சமாளிக்க அந்நாடுகளின் மக்கள் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.
வானிலை மேம்படும்வரை இங்கிலாந்தில் பல பாடசாலைகள் மூடப்பட இருக்கின்றன.
வைத்தியசாலைகள் அத்தியாவசியமற்ற சிகிச்சைகளை ஒத்திவைக்கின்றன. தாதிமை இல்லங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வெப்பநிலை அதிகரித்து வருவதால், பிரிட்டன் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது.
வெப்பம் கடுமையாக இருப்பதுடன், முதன்முறையாக அது ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று அங்கு வெப்பநிலை 41 டிகிரி செல்சியசைத் தாண்டும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இது, பிரிட்டனில் பதிவாகும் ஆக கூடிய வெப்பநிலையாகும். இதுவரை அங்கு பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்சியஸ். அது 2019ல் பதிவானதாக பிரிட்டிஷ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பிரான்சைப் பொறுத்தவரை, நாட்டின் வடமேற்குப் பகுதியில் வெப்பநிலை உச்சத்தை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
போர்த்துக்கலில் கடுமையான வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கானோர் மரணித்துள்ளனர்.
மொத்தத்தில், தெற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பம் காரணமாக 1,100 பேர் மரணித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM