ஹிட்லரின் கைக்கடிகாரம் ஏலத்தில்

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 05:02 PM
image

அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Adolf Hitler's personalized gold watch burgled by a French soldier will go  under the hammer for a whopping $4 million. The timepiece was given to the  Nazi leader in 1933 after he

4 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று திகதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை வென்ற நாள்.

Hitler's gold watch appears at auction with estimate of $2-4 million

ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.

கைக்கடிகார தயாரிப்பாளர்களும் இராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

Hitler's watch' to be auctioned, predicted to sell for Rs 144 crore

இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right