காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மூவரின் வங்கிக்கணக்குகளில் பெருந்தொகையான பணம் வைப்பிலிடப்பட்டதா ? உண்மை வெளியானது !

19 Jul, 2022 | 07:19 AM
image

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மூவரின் வங்கிக்கணக்குகளுக்கு பெருந்தொகையான பணம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் முற்றிலும் பொய்யானது என சி.ஐ.டி.யினரின் விசாரணைகளில் இருந்து ஒறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ பெருந்தொகையான பணம் ஒருபோதும் வைப்பிலிடப்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு அது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல்  அனைத்து கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் பொது மக்களில் பிரபலமான  செயற்பாட்டாளர்களாக அறியப்படும் ரெட்டா எனும்  ரனிந்து சேனாரத்ன,  டிலான் சேனநாயக்க,  அவிஷ்க விராஜ் கோனார ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும்  இலங்கை வங்கியின் மூன்று வங்கிக்கணக்குகளில் 450 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதனை வீரகேசரியிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த 15 ஆம் திகதி,  வெளிநாட்டிலிருந்து குறித்த மூவரின் மக்கள் வங்கி - யூனியன் பிளேஸ் கிளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தலா 150 இலட்சம் ரூபா வீதம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அவர்கள் வைப்புச் செய்யப்பட்டதிலிருந்து ஒரு மணித்தியாலத்துக்குள்  வெள்ளை நிற ப்ரியஸ் ரக மோட்டார் வாகனத்தில் வந்து, வங்கி ஊழியரையும் அச்சுறுத்தி பெற்றுச் சென்றதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாகின.

 இந் நிலையிலேயே அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  குறித்த பண விவகாரம் குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், 

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மூவரின் வங்கிக்கணக்குகளுக்கு பெருந்தொகையான பணம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் முற்றிலும் பொய்யானது என சி.ஐ.டி.யினரின் விசாரணைகளில் இருந்து ஒறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ பெருந்தொகையான பணம் ஒருபோதும் வைப்பிலிடப்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு அது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  எவ்வாறாயினும்  தமக்கு அவ்வாறு யூனியன் பிளேஸ் மக்கள் வங்கிக் கிளையூடாக பணம் வந்தமையை  போராட்டக் காரர்களான குறித்த மூவரும் மறுத்திருந்தனர். சமூக வலைத் தள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று குறித்த  திகதியில் தாங்கள் குறித்த வங்கிக் கிளைக்கே செல்லவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18