போலியான உறுதிமொழியை அளிக்க விரும்பவில்லை -  காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவிப்பு

By T Yuwaraj

18 Jul, 2022 | 10:25 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களுக்கும் எமது வேலைத்திட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு கிடையாது.

எனினும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு அரசாங்கத்தை அமைத்து அதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்று நான் போலியான உறுதிமொழியளிக்க விரும்பவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No description available.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் திங்கட்கிழமை (18 ) இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களுக்கும் எமது வேலைத்திட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு கிடையாது.

ஆனால் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான காலத்தினை குறிப்பிடுமாறு வலியுறுத்தப்படுகின்ற விடயத்தினை நான் வேறு கோணத்திலேயே நோக்குகின்றேன்.

வேலைத்திட்டமொன்றுடனேயே இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இடைக்கால அரசாங்கத்தின் இலக்காக அமைய வேண்டும்.

எனவே குறிப்பிட்ட காலத்திற்கான இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் , அந்த காலப்பகுதிக்குள் வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாமல் போனால் அந்த அரசாங்கமும் தோல்வியடையும்.

பொது வெளிகளில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஒருமித்த இணக்கப்பாட்டினை எந்தளவிற்கு பாராளுமன்றத்தினுள் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது சந்தேகத்திற்குரியது.

நாடு பொருளாதார வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையில் ஒரே நேரத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று என்னால் போலியான உறுதிமொழியளிக்க முடியாது.

எனினும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பூச்சிய நிலைமையை அடைந்துள்ள பொருளாதாரத்தை படிப்படியாகவே கட்டியெழுப்ப வேண்டும். மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கும் நிதி பலம் அவசியமாகும்.

மிகவும் கடினமான கால கட்டத்திலேயே இருக்கின்றோம். அதே போன்று வங்கி கட்டமைப்புக்களும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன. பிரச்சினைகள் அனைத்தையும் நன்கு மதிப்பிட்டிருக்கின்றோம். எனவே கடினமான நிலைமைக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும் பட்சத்தில் தமது போராட்டம் தொடரும் என்றும் , அவரை தோல்வியடைச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38