(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் அபாயகரமாக வாகனம் செலுத்தி ஒருவருக்கு படுகாயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரைவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பானர், சம்பிக்க ரணவக்க தரப்பினர் முன் வைக்க உத்தேசித்துள்ள அடிப்படை ஆட்சேபனத்தை முன் வைக்க சந்தர்ப்பம் அளிக்கும் விதமாக ஆகஸ்ட் 31 இல் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
திங்கட்கிழமை (18) இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் ஆஜரானார். சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன ஆஜரானார்.
அதன்படி மன்றில் விடயங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன இவ்வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனத்தை முன் வைத்தார்.
இந் நிலையிலேயே அடிப்படை ஆட்சேபனைகள் குறித்த வாதங்களை முன் வைப்பதற்காக வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM