தகிக்கும் வெப்பத்தால் திணறும் ஐரோப்பா  போர்த்துக்கல், ஸ்பெயினில் 1,000 க்கும் அதிகமானோர் பலி

Published By: Digital Desk 4

18 Jul, 2022 | 09:24 PM
image

ஐரோப்பாவெங்கும் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசுவதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் தொகை 1,000 பேரையும் கடந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு  உயிரிழந்தவர்களில் அநேகர் வெப்பம் தொடர்பான அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீயால்; மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸில் வெப்பநிலை 44 பாகை  செல்சியஸாக உயரவுள்ளதாக  எதிர்வுகூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் மேற்கு பிரான்ஸிலுள்ள ஜிரொனட் பிராந்தியத்திலிருந்து மட்டும் காட்டுத் தீ காரணமாக  16,000 பேருக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர். அந்தப் பிராந்தியத்தில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப் பகுதி எரிந்து கருகியுள்ளது.

ஸ்பெயினில் 36   இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 62 வயதான தீயணைப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில்  43 பாகை செல்சியஸ்  வரை வெப்பநிலை உயரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவ்வாறு  வெப்பநிலை உயரும் பட்சத்தில்  பல்லாயிரக்கணக்hனோர் உயிரிழக்கலாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வெப்பநிலை அதிகரிப்பிற்கு காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையே காரணம் என  நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34