(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய நிலைவரத்திற்கு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதென்பது ஒருபோதும் தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக மீளப்பெறப்படுவதுடன் மக்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால அரசாங்கத்திற்குரிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதில் ஜனாதிபதியினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தும்போது அதன்மூலம் அவசரகால வழிகாட்டல்களை வெளியிடுகின்ற, அரசியலமைப்பின் சரத்துக்கள் தவிர்ந்த எந்தவொரு சட்டத்திலும் உள்ள சரத்துக்களை நீக்குகின்ற அல்லது திருத்துகின்ற அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றது.
குறிப்பாக அவசரகால வழிகாட்டல்களின் ஊடாக நீதிமன்றப்பொறிமுறைக்கு அப்பால் நபரொருவரைத் தடுத்துவைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அவசரகால வழிகாட்டல்களின் மூலம் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையான மனித உரிமை மீற்ல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
எனவே பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பை நடத்தவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுகுறித்துக் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் சட்டரீதியான உரிமையை அடக்குவதற்கோ அல்லது குறித்தவொரு வேட்பாளர் தொடர்பில் விருப்பு, வெறுப்பை வெளியிடுவதற்கான வாய்ப்பை முடக்குவதற்கோ அவசரகாலச்சட்ட வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று நாம் கருதுகின்றோம்.
போராட்டங்களில் ஈடுபடுதல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளின் பிரதானமானதாகும்.
ஆகவே அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும் முடக்குவதற்கு அவசரகால வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதுடன் அது தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடாது.
நாட்டின் தற்போதைய நிலைவரத்திற்கு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதென்பது ஒருபோதும் தீர்வாக அமையாது என்று நாம் நம்புகின்றோம்.
எனவே அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு உடனடியாக மீளப்பெறுவதுடன் மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM