அட்டனில் பீதியை ஏற்படுத்திய சூட்கேஸ் - பயத்தில் உறைந்துபோன பொதுமக்கள்

Published By: Digital Desk 4

18 Jul, 2022 | 08:52 PM
image

(க.கிஷாந்தன்)

சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் அட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (18.07.2022) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது.

அட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப்பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த சூட்கேஸால்  இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது. பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசமாக மாற்றினர்.

அதையடுத்து, வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபடும் போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில், பயணி ஒருவர் குறித்த சூட்கேஸ்சை விட்டுச் சென்றுள்ளதாகவும், குறித்த சூட்கேஸ்சில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி சூட்கேஸை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அட்டன் நகரம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45