(ஏ.என்.ஐ)
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து குற்றங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தை எதிர்த்து மோல்டோவாவில் ஒரு மையத்தை உருவாக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை மேலாண்மைக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு மையத்தை அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளான உக்ரைன் மற்றும் மோல்டோவாவைச் சேர்ந்த பங்குதாரர்களும் கூட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் போது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஆயுதங்களின் அச்சுறுத்தலைப் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
யூகோஸ்லாவியாவில் நடந்த போரின் அனுபவத்தின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள குற்றவியல் வலையமைப்புகளில் வன்முறைக்கு ஊட்டமளிக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களுக்கு துப்பாக்கிகள் கடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் ஆயுத கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM