(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தையும் குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இன்றைய தினம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய பேருந்து கட்டணத்தை நாளை அறிமுகப்படுத்தி, நாளை நள்ளிரவு முதல் புதிய பேரூந்து கட்டண திருத்தத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைவடைந்துள்ளதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய முடியும் என தனியார் பேரூந்து தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் தடையின்றி கிடைக்கப்பெறுமாயின் பேருந்து கட்டணத்தை திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விலை குறைப்பிற்கமைய பேருந்து சேவையின் ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்க முடியும் என அகில இலங்கை பயணிகள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் மாத்திரம் பேருந்து கட்டணம் ஐந்து முறை திருத்தம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 30ஆம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம்,எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டணம் 21.85 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM