ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் பென் ஸ்டோக்ஸ்

Published By: Digital Desk 4

18 Jul, 2022 | 06:10 PM
image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளின் தலைவரான பென் ஸ்டோக்ஸ், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியே பென் ஸ்டோக்ஸ் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும்.

இங்கிலாந்து அணிக்காக  104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 39.44 என்ற துடுப்பாட்ட சராசரி பெற்றுக்கொண்டுள்ளார். இவரது ஒருநாள் போட்டிகளில் 2919 ஓட்டங்களை  மாத்திரம் பெற்றுள்ளார். இதில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் உள்ளடங்கும்  இவரது. ஸ்ட்ரைக் ரேட் 95.26 ஆகவுள்ள நிலையில், 38 பவுண்டரி 88 சிக்ஸர்களுடன். அதிகபட்ச ஓட்டங்களாக ஆட்டமிழக்காது 102 .ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது ஒருநாள் போட்டி ஓய்வு குறித்து அவர் குறிப்பிடுகையில்,

“இந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன், நாளை (செவ்வாய்) நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே என் கடைசி போட்டி. மிகவும் கடினமான முடிவுதான். என் சகாக்களுடன் இந்த வடிவத்தில் ஆடிய அனைத்து கணங்களையும் நேசிக்கிறேன்.

என்னால் 100 சதவீதம் பங்களிப்பு செய்ய முடியவில்லை. யார் இங்கிலாந்தின் உடைகளை அணிந்தாலும் அதை விரயம் செய்ய முடியாது ஆகவே ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தேன்.

3 வடிவங்கள் என்பது என்னால் இப்போது இயலாத ஒன்று. ஷெட்யூல் மிகவும் டைட்டாக இருப்பதால் என் உடல் அதற்கேற்ப தயாராக இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்பும் வருவதில்லை. மேலும் இன்னொருவரின் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், இன்னொரு வீரர் என்னை விட ஜோஸ் பட்லருக்கு நல்ல பங்களிப்பு செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.

கடந்த 11 ஆண்டுகள் எனக்குக் கிடைத்த நினைவுகள் இன்னொரு வீரருக்கும் கிடைக்கட்டும். இந்த முடிவை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பங்களிப்பையும் செய்வேன், டி20 கிரிக்கெட்டில் முழு மூச்சாக இறங்குவேன்” என தனது உருக்கமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35