காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் முக்கியமான மூவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்பப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முக்கியமான மூவரின் வங்கிக்கணக்குகளிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பெத்தும் கேர்ணலை கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாகவும் எனினும் தற்போது அவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை எரித்து பழங்கால பொருட்கள் திருடப்பட்டு, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் சேதஙகளை ஏற்படுத்தியமை தொடர்பில் சுமார் எழுபது சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரதிடு செனிவரட்ண, டிலான் சேனநாயக்க, அவிஸ்க விராஜ் கொனர ஆகிய மூவரும் சமீபத்தில் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தலா 150 இலட்சம் ரூபாய் வீதம் 450 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM