(எம்.ஆர்.எம்.வசீம்)
எரிபொருளுக்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் தினம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைய எதிர்வரும் வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும். அதனால் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் இருப்பதில் பயன் இல்லை. வியாழக்கிழமை முதல் கியூவ். ஆர். கோட் மற்றும் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
அதனால் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் இருப்பவர்கள் அந்த இடத்தில் இருந்து விலகிச்செல்லவேண்டும்.
அதன் பிரகாரம் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கம் 0,1 மற்றும் 2 ஆகிய இலக்கங்கள் உடைய வாகன உரிமையாளர்கள் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி எரிபொருள் பெற்றுக்கொள்ள வரவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM