ஆதரவளித்தால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கான உத்தரவாதத்தை கோருங்கள் - சமத்துவக் கட்சி

Published By: Vishnu

18 Jul, 2022 | 10:21 PM
image

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த்தரப்புக் கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும்.

போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள், பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான உத்தரவாதத்தை கோர வேண்டும். என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்ப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவதாது,

நாட்டின் அரசியல் பொருளாதார நிலவரம் மிக மோசமான அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகி, மக்களுடைய நாளாந்த வாழ்க்கையே பெரும் சவாலாகியிருக்கிறது.

வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்ற கேள்வி  எழுந்துள்ளது. இதற்கு எவரிடத்திலும் பதிலைக் காணமுடியவில்லை. இதனால் மக்கள் போராட்டம் வலுப்பெற்று நிலையான அரசியல், பொருளாதார மாற்றத்தைக் கோரிநிற்கிறது.

 இந்த நிலையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தென்னிலங்கை அரசியற் கட்சிகள் உட்பட தமிழ், முஸ்லிம்,  மலையகக் கட்சிகள் அனைத்தும் அரசியற் குழப்பத்திலும் வழமையான சூதாட்டத்திலுமே ஈடுபடுகின்றன.

இது நாட்டில் மேலும் ல பல நெருக்கடிகளை உருவாக்கி, மக்களுக்கு எதிரான போக்கையே வளர்ப்பதாக அமைகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் நாடகங்களையும் கட்சி லாபங்களையும் கைவிட்டு, மக்களுக்கான அரசியல் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் பொறுப்பாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையென்றால் தொடர்ச்சியாக நடந்து வரும் பொறுப்பற்ற அரசியல் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் போராடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும்.

இதேவேளை இந்த அரசியற் சூழலில் நடைபெறவுள்ள இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த்தரப்புக் கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும்.

போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள், பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் வகையிலான அழுத்தத்தை அவை கோர வேண்டும். எவருக்காவது ஆதரவை வழங்குவதாக இருந்தால் அவை இதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வரலாற்றுச் சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் இழந்து வரும் நிலை மேலும் தொடரக் கூடாது. தமிழ் மக்கள் எப்போதும் தேசிய நெருக்கடி, இன நெருக்கடி என இரட்டை நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பும் செயற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் இதற்கான அழுத்தத்தை இந்தக் கட்சிகளுக்கு அளிப்பது அவசியமாகும்  என அவ் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15
news-image

மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை...

2023-10-03 16:13:50