டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்

Published By: Vishnu

18 Jul, 2022 | 03:36 PM
image

'விக்ரம்', 'மாமனிதன்' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு 'மக்கள் செல்வன்' விஜயசேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய மலையாள திரைப்படமான ''19 (1)(a)'', டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் ஓய்வில்லாமல் நடித்து, அகில இந்திய முன்னணி திரை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜயசேதுபதி.‌ வி.எஸ். இந்து எனும் பெண் படைப்பாளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ''19(a)(1).'' இதில் விஜய சேதுபதி கதையின் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனனும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மலையாள நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கருத்து சுதந்திரத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அன்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி மற்றும் அன் மெகா மீடியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி இதற்கு முன் 'மார்க்கோனி மத்தாய்' எனும் மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்பதும், அவர் நடிக்கும் இரண்டாவது மலையாள படம் இது என்பதும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின்...

2024-10-05 17:24:45
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட நடிகர்...

2024-10-05 17:27:54
news-image

விமல் நடிக்கும் 'சார்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2024-10-05 17:24:59
news-image

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்'...

2024-10-05 17:17:26
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் முதல்...

2024-10-05 17:16:43
news-image

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் ஹாரிஸ்...

2024-10-05 17:16:33
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய ஆனந்த் ராஜின் 'மெட்ராஸ்...

2024-10-05 17:16:22
news-image

விஜய் நடிக்கும் 'விஜய் 69' படத்தின்...

2024-10-05 17:16:09
news-image

செல்ல குட்டி - திரைப்பட விமர்சனம்

2024-10-04 17:02:21
news-image

ஆரகன் - திரைப்பட விமர்சனம்

2024-10-04 17:02:11
news-image

பொலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கும்...

2024-10-04 17:02:00
news-image

‘உலகநாயகன்' கமல்ஹாசனின் 'இந்தியன் 3 '...

2024-10-04 16:56:35