நடக்க முடியாத தனது மனைவியை பராமரிக்கும் லொறிச்சாரதி - மனதை உருக்கும் கதை

Published By: Vishnu

18 Jul, 2022 | 01:48 PM
image

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் நடக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்ட தனது மனை­வியை நீண்ட கால­மாக எந்­நே­ரமும் தன்­னுடன் அழைத்துச் சென்று, அவரை பராமரித்து வரு­கிறார். இந்­ந­பர், மனை­வியை பரா­ம­ரிக்கும் விதம் தொடர்­பான வீடியோ இணை­யத்தில் வெளி­யாகி வைர­லா­கி­யுள்­ளது.

நீ ஜியான்வென் எனும் 39 வய­தான இந்­நபர், காங்சு மாகா­ணத்தின் லோங்னன் நகரைச் சேரந்­தவர். லொறி சார­தி­யாக இவர் பணி­யாற்­று­கிறார்.

நீ ஜியான்­வென்னின் மனைவி காவோ யின்­கி­யிங்­குக்கு மூளையில் ஏற்­பட்ட பாதிப்பின் கார­ண­மாக 2020 ஆம் ஆண்டில் அவரின் கை,கால்கள் செய­லி­ழந்­தன. இதனால், நடக்­க­வும் முடி­யாத நிலைக்கு அப்பெண் தள்­ளப்­பட்டார்.

இதை­ய­டுத்து. தனது அன்பு மனை­வியை எந்­நே­ரமும் தனக்கு அரு­கி­லேயே வைத்துப் பரா­ம­ரிக்­கிறார் ஜியான்வென்.

தனது சொந்த ஊரி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள ஷாங்காய் நகரில் 2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து லொறி சார­தி­யாக ஜியான்வென் பணி­யாற்­று­கிறார். 

தன்னால் வீட்­டி­லுள்ள மனை­வியை பரா­ம­ரிப்­பது சிரமம் என்­பதால், தனது லொறி­யி­லேயே எல்லா இடங்­க­ளுக்கும் மனை­வி­யையும் அழைத்துச் செல்­கிறார் ஜியான்வென். 

மனை­வியை லொறியில் தூக்கி இறக்கும் அவர், அவரை குளிக்­கச்­செய்­வது, ஆடை அணி­விப்­பது,  அலங்­கா­ரங்­களை செய்­வது என அனைத்­தையும் தானே  கவ­னித்­துக்­கொள்­கிறார் ஜியான்வென்.

'என் மனைவி காவோ யின்­கியிங் தான் எனது முதல் காதல். அவரை நான் மிகவும் நேசிக்­கிறேன்' என்­கிறார் ஜியான்வென்.

'வீட்டில் எனது சிறு பிள்­ளைகள் இருவர் உள்­ளனர். 76 வய­தான எனது தாய்க்கு, எனது மனை­வியை பரா­ம­ரிக் கும் அள­வுக்கு சக்­தி­யில்லை அதனால், என் மனை­வியை எனக்கு அரு­கி­லேயே வைத்­துக்­கொள்­கிறேன்' எனவும் ஜியான் வென் தெரி­வித்­துள்ளார்.

புனர்­வாழ்வு சிகிச்­சை­க­ளுக்குப் பின்னர், தற்­போது ஜியான்­வென்னின் உத­வி­யுடன் சிறிது தூரம் நடக்கும் நிலைக்கு அவரின் மனைவி முன்­னே­றி­யுள்ளார்.

லொறியில், தன் மனை­விக்­கான கழி­வறை, குளியல் வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இடம் போதாமல் உள்­ளது என்­பது தற்­போது நீ ஜியான்­வென்னின் கவலை. எதிர்­கா­லத்தில் பெரி­ய­தொரு வாக­னத்தை வாங்கி, அதில் மனை­விக்கு கூடுதல் இடத்தை ஒதுக்க வேண்டும் என தான் விரும்­பு­வ­தாக ஜியான்வென் கூறு­கிறார்.

'என் மனைவி உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருந்­போது வீட்டில் எனது சகல விட­யங்­க­ளையும் அவரே கவ­னித்­து­கொண்டார்.

என் இரு பிள்­ளை­களைப் பெற்றார். அவர் சுக­வீ­ன­ம­டைந்­தி­ருக்கும் போது நான் அவரை கைவிட்­டு­விட முடியாது. அப்படிச் செய்தால் எனது வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்ச்சி இருக்கும்' என நீ ஜியான்வென் கூறு கிறார்.

முன்னுதாரணமான மனிதர் என நீ ஜியான்வென்னை பலரும் பாராட்டு கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right