லொறி கதவு திடீரென திறக்கப்பட்டதால் வீதியில் பியர் வெள்ளம்

Published By: Vishnu

18 Jul, 2022 | 12:00 PM
image

பியர் போத்­தல்­களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்­றி­லி­ருந்து பெரு­ம­ள­வான பியர் வீதியில் கொட்­டப்­பட்ட சம்­பவம் தென் கொரி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து வீதியை சுத்­த­மாக்­கு­வ­தற்கு உத­விய மக்­க­ளுக்கு குறித்த பியர் நிறு­வனம் பகி­ரங்­க­மாக நன்றி தெரி­வித்­துள்­ளது.

தென் கொரி­யாவின் சுன்­சியோன் நகரின் வளை­வான பகு­தி­யொன்றில் மேற்­படி வாகனம் சென்­று­கொண்­டி­ரு­ருந்­த­போது, அதன் பக்­க­வாட்டுக் கதவு திறந்­து­கொண்­டது.

 

இதனால், பியர்­போத்­தல்கள் அடங்­கிய பெரும் எண்­ணிக்­கை­யான பெட்­டிகள் வீதியில் வீழ்ந்து உடைந்­தன. வீதியில் பியர் கொட்­டப்­பட்­டதும் அப்­ப­கு­தியை சுத்­த­மாக்­கு­வ­தற்கு அங்­கி­ருந்த பொது­மக்கள் உத­வினர்.

இவ்வாறு உத­விய மக்­க­ளுக்கு குறித்த பியர் நிறு­வனம் நன்றி தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி பியர்­பெட்­டிகள் வீதியில் வீழ்ந்­த­போது கண்­கா­ணிப்பு கெம­ராக்­களில் பதி­வா­கிய காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்