பாலியல் விளையாட்டொன்று விபரீதமானதால் ஆண் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் காதலி கடும் காயங்களுக்குள்ளான சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலியில் உல்லாசப் பயணத்துக்குப் பிரசித்தி பெற்ற புளோரன்ஸ் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேனிலவுக்குச் செல்லும் தம்பதியினரிடம் பிரசித்தி பெற்ற ஒரு ஹோட்டல் இது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜோடியொன்றே இந்த விபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
40 வயதான ஆண் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்நபரும் 43 வயதான அவரின் காதலியும் இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓர் இரவுக்கு சுமார் 400 யூரேரா கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறையொன்றில் இந்த ஜோடியினர் தங்கியிருந்தனர்.
மேற்படி அறையில் திடீரென கூக்குரல் கேட்ட நிலையில், அதிலிருந்த பெண், ஹோட்டல் பணியாளரிடம் உதவி கோரினார். அப்பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டன.
ஆனால், மேற்படி அறையிலிருந்து கூக்குரல்கள் கேட்டவுடன், அருகிலுள்ள அறைகளில் இருந்த பலர், ஹோட்டல் வரவேற்புப் பீடத்துக்கு ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தனர்.
குறித்த அறையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் எனவும், அவரின் உடலில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் இத்தாலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரின் காதலியான பெண்ணின் உடலிலும் பல காயங்கள் காணப்பட்டன.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி மேலும் கூறுகையில், “இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருவரும் பிரித்தானியர்கள்.
இச்சம்பவத்துக்கு இரு காரணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று வாக்குவாதம். மற்றொரு காரணம் பாலியல் விளையாட்டு. ஆனால் பாலியல் விளையாட்டு என்பதே பொதுவான விசாரணைக் கோணமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பெண்ணை விசாரணைக்குட்படுத்தும் போது இச்சம்பவம் குறித்த உண்மைகள் வெளிவரும் என தாம் நம்புவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM