நாட்டில் இன்றும் நாளையும் கனத்த மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் அவ்வப்போது குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சுறாவளியாக மாறி பங்காதேஷை நோக்கி நகர்ந்துசெல்வதாகவும் இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் காணப்படாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.