(குமார் சுகுணா)
உங்கள் கடந்தகாலத்தில் நீங்கள் எத்தகைய கர்மவினையை சேர்த்திருந்தாலும், இந்த கணத்தின் கர்மவினை எப்போதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் நமக்கு வினை பயனை கொடுக்கும். என்கிறது மெய்ஞானம். இதனையே எல்லா தாக்கத்திற்கும் எதிரானதும் சமமானதுமான மறுதாக்கம் இருக்கும் என்கிறது நியூட்டனின் விதி மூலம் விஞ்ஞனம்.
இந்த விதி கர்மா என்பதெல்லாம் நாம்செய்யும் செயல்தான். நாம் என்ன செயல் செய்கின்றோமா அதன் பயனை நிச்சயமாக அறுவடை செய்வோம்.
இந்து, பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களிலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர். ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்.
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு
முன்பெல்லாம் யாரோனும் மிகவும் துன்பத்தை அனுபவி்த்தால் புனர் ஜென்ம பாவத்தை இப்போது அனுபவிக்கிறாய் என சிலர் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த கலிகாலத்தில் நாம் என்ன வினைகளை விதைக்கிறோமோ அதனை நாம் வாழும் காலத்திலேயே அனுபவித்து விடுகின்றோம்.
அது தனிமனிதருக்கு அல்ல , நாட்டின் ராஜாவாக இருந்தாலும் இதேநிலைதான். இதற்கு சிறந்த உதாரணமாக மாறியிருக்கின்றது இலங்கை அரசியல்வாதிகளின் நிலை. காலம் மிக சிறந்த ஆசான். அது தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க மறப்பதில்லை.
இலங்கையில் இனபிரச்சினைக்கு மிக பெரிய தூபம் இட்டது யார் என்றால், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கதான். இவர் தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் மக்களின் மனங்களில் தனிசிங்கள சட்டம் எனும் விசத்தை பரப்பினார். அதன் பின்னர்தான் இனவாதம் அதிகம் வேரூண்ட தொடங்கியது. அப்போது நாடு முழுவதுமே தமிழ் பேர் பலகைகள் தார் ஊற்றி அழிக்கப்பட்டன. ஸ்ரீ கலவரம் மூண்டது. இதன் பயனை சில காலங்களிலேயே அவர் அனுபவித்தார். யாருடைய ஆதரவுக்காக இதனை எல்லாம் செய்தாரோ அவர்களின் கைகளினாலேயே சுடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனை போல பலருக்கு அவர்களது கர்மா பயன் அளித்திருக்கும். இதில் நாம் கண்முன்பு இப்போது பார்க்கின்ற அரசியல் நிகழ்வுகளும் கர்ம வினைகளின் பயனே.
ஆம், இலங்கை வரலாற்றில் நடைபெற்ற உள்நாட்டு இறுதி யுத்தத்தின் போது சர்வதேச போர் சட்டங்களை மீறி தனது நாட்டு மக்களையே கொடூரமாக கொலை செய்ததாக இலங்கையின் உயர் அதிகாரத்தில் இருந்த மகிந்த ராஷகப்ஷ, கோட்டா உள்ளிட்டவர்களின் மீது போர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் உலக தமிழர்களிடம் இருந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
ஆனால் இவர்கள் யுத்தத்தை வென்றபோது இன்னொரு நாட்டின வெற்றி கண்டது போலவே மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இறந்தவர்கள் தங்களது சொந்த நாட்டு மக்கள் என்ற உணர்வு ஒரு போதும் இருந்ததில்லை. வீதிகளில் பாற்சோறு செய்து கேக் வெட்டி போரின் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்த சில வருடங்கள் மே 18 தேசிய வெற்றி தினமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் என்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்னவென்று இதுவரை உறவுகளை தொலைத்தவர்களுக்கு கண்டுப்பிடிக்க முடியவில்லை. பத்து வருடங்கள் கடந்து விட்டன இன்னும் தன் மகன் எங்கே.. எனது அம்மா எங்கே.. அப்பா எங்கே என்று வீதிகளில் கண்ணீரோடு போராடும் உறவுகளின் குரல்கள் அதிகாரத்திற்கு மாறிமாறி வ்நதவர்களின் காதுகளில் கேட்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படம் பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். அந்த காட்சிகள் இ்ப்போது நினைத்தாலும் உயிரை உருகுழைய வைக்கும். வெள்ளை நிற பாடசாலை சீருடையில் சிறுவர்கள் விமான செல்வீச்சுக்கு பயந்து பங்கருக்குள் நுழைவதும் உயிரை காப்பாற்றிக்கொள் அவர்கள் பட்ட பாடும். சற்று நேரத்தில் இரத்த வெள்ள காடாக பிணை குவியல்கள் கிடந்தததையும். இலடச்சகணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்று இன்று வரை தெரியாது. பலர் அண்டைய தேசத்திலும் சொந்த நாட்டிலும் அகதிகளாகினர்.
கைகள் கட்டப்பட்ட நிலையில், பெண் பிள்ளை உள்ளிட்ட பலர் சுடப்படும் காட்சி. பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் இருந்த ஒரு பத்து வயது சிறுவன் சற்று நேரத்தில் நெஞ்சில் துப்பாக்கு குண்டுகள் துளைத்த நிலையில் பிணமாக கிடந்தது என பல பயங்கரமான இதயத்தை பிழியும் காட்சிகளை பார்த்தோம். சர்வதேச யுத்த சட்டங்களை மீறிய இந்த சாட்சிகள் இருந்தும் கூட அவை பொய் என்று மறுக்கப்பட்டது. ஆனால் யாரிடம் இருந்து தப்பித்தாலும் நாம் செய்த கர்ம வினை நம்மை விடாது. எமக்கே தெரியாமல் எம்மை தொடர்ந்து வந்து ஒருநாள் கழுத்தை நெறித்துவிடும். அந்த நிலைதமான் அன்று இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஷகளுக்கு இன்று நேரிட்டிருக்கின்றது.
30 வருடகாலமாக யாராலும் வெல்ல முடியாதவர்களை நாம் தோற்கடித்துவிட்டோம். இனி இந்த நாட்டுக்கு நாமே ராஜா. சாகும் வரை இல்லை. சாவை கடந்தும் இந்த நாட்டை ஆளுவோம் என்ற இறுமாப்பில் இருந்தவர்கள் இன்று அடையாளம் தொலைந்து விட்டனர். எத்தனை இலட்ச மக்களை அகதிகளாக்கினரோ இன்று தனக்கு எந்த நாடேனும் தங்சம் தருமா என்று தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். அகதியாக மாலைதீவ। சிங்கபூர் என அடைகளம் தேடி அழைந்துக்கொண்டிருக்கின்றார்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ஆசை தீர ஒன்றுக்கு இரண்டு முறை யுத்த வெற்றியை காரணமாக வைத்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து விட்ட பின்னரும் அவரது பதவி ஆசை அவரை துரத்த பிரதமர் நாற்காலியிலும் அமர்ந்தார். ஆனால் அவரது வினை அவரை விடவில்லை. இன்று பதவியில் இருக்கும் போதே விரட்டியடிக்கபட்டுவிட்டார். எந்த மண்ணில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரின் தலையை துப்பாக்கிகள் பதம் பார்த்து கொன்றனவோ அதே திருக்கோண மலை மண்ணில் அடைகளம் தேடி மிக அவலமான முறையில் ஓடினார். அவர்களது சொந்த ஊரில் வான் உயர கட்டபடப்டிருந்த அவரது தந்தையின் சிலை நொறுக்கபட்டது. இன்று அவர் எங்கே தலைமறைவாக இருக்கின்றார் என்பது கூட நாட்டு மக்களுக்கு தெரியாது. அவர் இறந்தால் மகிழ்வோம் என சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் வெளியிட்டு மகிழ்கின்றனர். இதனை போலதான் இலங்ககை வரலாற்றில் எந்த ஜனாதிபதிக்கும் நடக்காத நிகழ்வு கோட்ட பாயவிற்கு நடந்துள்ளது.
உலகின் மிக பெரிய நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட பதவி இலங்கை ஜனாதிபதி பதவி. இனவாதம் பேசி தேர்தல் வெற்றியை பெற்று ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது செய்த பாவங்கள் அவரை அந்த கதிரையில் அமரவிடவில்லை. என்று அமர்ந்தாரோ அன்று பிடித்தது நாட்டுக்கு பீடை. எல்லாம் தட்டுப்பாடு என்நாளும் விலையேற்றம். மக்கள் வீதியில் இறங்கி போராடிவருகின்றனர். வாக்களிக்காதவர்கள் மட்டும் அல்ல. அவருக்கு வாக்களித்தவர்கள் கூட இன்று அவரை வெறுக்கின்றனர். உலக வரலாற்றில் எந்த ஜனாதிபதிக்கும் இந்த நிலை ஏற்படவில்லை. அவரது அரச மாளிகை மக்களின் கைகளுக்கு வந்துவிட்டது. நீ போ என்று மக்கள் கூச்சலிட்டுக்கு கொண்டிருக்க தலைமறைவாகி போனார்.
இறுதியில் மாலைதீவுக்கு விமானபடை விமானம் மூலம் சென்றவருக்கு அங்கும் எதிர்ப்பு. அமெரிக்காவிடம் தஞ்சம் கோரியதாகவும் அது மறுக்கவே டுபாய் சிங்கபூர் என்று எங்காவது செல்லலாம் என்று செய்திகள் வருகின்றன. ஆனால் அவரை சர்வதேச பொலிஸாரின் மூலம் பிடியாணை பிறப்பித்து கைது செய்ய வேண்டும் பிரித்தானியாவில் குரல் எழுந்துள்ளது. ஒருவேலை கைது செய்யப்பட்டாலும் வியப்பில்லை. எத்தனையோ பேரை அகதிகளாக்கியவர் இன்று அகதி அந்தஸ்த்து கூட கிடைக்காமல் அலறிக்கொண்டிருக்கிறார். எத்தனை தாய்மார்களின் கண்ணீர் இந்த கர்மாவுக்கு காரணமோ இறைவனுக்குதான் தெரியும்.
பதவியில் இருக்கும் போது பொதுமக்களின் பணத்தை தங்களது சொகுசுக்காக அனுபவித்து விட்டு தேர்தலில் இனவாதம் பேசி மட்டும் வென்றுவிடலாம் என்ற அவர்களின் கனவு சில காலங்களிலேயே சுக்குநூறாகிவிட்டது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்கள் கோரும் நீதி விசாரணை தண்டணைகள் என்பதைதான் இன்று பெரும்பான்மையினரும் கோருக்கின்றனர். போர்குற்றத்துக்காக அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுழைய செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்ததற்காக விசாரணை நடத்தி சிறையில் தள்ள வேண்டும் என கோருகி்னறனர். கர்மா எத்தனை பலமானது. இன்னோரு விடயத்தையும் கூற வேண்டும். இன்று பிரதமரின் வீட்டில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரியூட்டப்பட்டதற்காக அவர் பதறுகிறார். ஆனால் ஒரு இனத்தில் அடையாளம் வரலாறு 41 வருடங்களுக்கு முன் இவர் கல்வி அமைச்சராக இருந்த போதுதான் எரியூட்டி அழிக்கப்பட்டது. ஆம் தமிழரின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓலை சுவடிகளையும் நூல்களையும் தன்னகத்தே கொண்டிருந்த யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது இவரது கட்சியின் ஆட்சியில்தான். அந்த கர்மா கூட இன்று இவரது நூல்கள் தீயில் கருக காரணமாக இருக்கலாம்.
இன்று மக்களை ஏமாற்றிவிட்டு கோட்டா வெளிநாடு தப்பித்துள்ளார். அவரது ஏனைய சகோதரர்களும் தப்பியிருக்கலாம். ஜனநாயமே இல்லாமல் ஆட்சி யாரின் கையிலோ இருக்கலாம். ஆனால் இந்த கர்மாவிற்கும் இவர்கள் என்றேனும் பதில் கூற நேரிடும்.
அது மட்டும் சொந்த நாட்டில் ஆண்டாட்டு காலமாக வாழும் சகோதர இன மக்கள் கொல்லப்பட்டதற்காக பாற்சோறு செய்து வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நமது சகோதர பெரும்பான்மையின மக்கள் இன்று தமிழர்கள் ஏன் அரசுக்கு எதிராக போராடினார்கள் அவர்கள் எப்படி ஒடுக்கபட்டிருப்பார்கள் என உணர்நது கொள்ள வைத்துள்ளது காலம். பாராளுமன்ற முற்றுகைக்கு சென்ற போராட்டக்காரர்களில் பலர் மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒருவர் கண்ணீர் புகை குண்டு வீச்சின் பாதிப்பினால் மரணமாகியிருக்கின்றார். இந்த வலி அரசுகளின் அடக்குமுறை சிறுபான்மையினரை எப்படி தாக்கியிருக்கும் என பெரும்பான்மை மக்களையும் உணர வைக்கும் சந்தர்பங்களே.
எது எப்படியோ வளமான எமத நாடு இன்று சீரழிந்துக்கொண்டிருக்கின்றது. யார் காப்பாற்றுவார்கள் என யாருக்கும் தெரியாத நிலை . ஆயினும் அரசியில் பதவிகளின் மீதுள்ள மோகத்தில் சில குள்ள நரிகள் மீண்டும் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. ஆனால் அது இனி நெடுகாலம் நீடிக்காது. எந்த பதவியில் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு செய்யும் கர்மா நம்மையும் துரத்தும் என்பதற்கு இன்றைய இலங்கையின் அதி உயர் பதவிகளில் இருந்தவர்களின் நிலை சிறந்த எடுத்து காட்டு. இனி மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கும் இது சிறந்த பாடமே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM