யாழ்ப்­பாணம், காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இரு வர் பலி­யா­னமை தொடர்பான மரண விசா­ரணை அறிக்­கை­யா­னது நேற்­றை­ய­தினம் யாழ்.நீதி­மன்றில் நீதி­வானால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குறித்த வழக்கு விசா­ர­ணையை எதிர்­வரும் பதி­னெட்டாம் திக­தி­வரை ஒத்­தி­வைத்த நீதிவான் சதீஸ்­கரன், மாணவர் படு­கொலை தொடர்பில் கைதான ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அந்த சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ருக்கு உத்­த­ர­விட்டுள்ளார்.

மாணவர் படு­கொலை தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­யா­னது நேற்­றைய தினம் யாழ்.நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் சதீஸ்­கரன் முன்­ 

னி­லையில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.இதன்­போது பலி­யான 

மாண­வர்கள் சார்பில் மன்றில் முன்­னி­லை­யா­கிய சட்­டத்­த­ர­ணிகள் குறித்த சம்­பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்­சி­யங்கள் உள்­ள­தாக குறிப்­பிட்­டனர்.

கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் பலி­யா­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து இச் சம்­பவம் தொடர்­பாக யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய நேற்­றைய தினம் வரை அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அத்­துடன் இந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளா­னது குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரது விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சம்­பவ இடத்தில் இருந்து துப்­பாக்கி ரவைகளின் வெற்­றுதோட்டாக்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

 இந்த வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது பலி­யான மாண­வர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான சயந்தன், கணே­ச­ராஜா,  வி.ரி.சிவ­லிங்கம், சுகன்யா கணே­ச­லிங்கம், ஏ.ரன்ஜித் ஆகியோர் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தனர்.

நீதி­ப­தியின் மரண விசா­ரணை அறிக்கை

யாழ்.நீதிவான் சதீஸ்­க­ரனால் குறித்த வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து  மரண விசா­ரணை அறிக்­கை­யினை அவர் மன்றில் வெளி­யிட்­டி­ருந்தார்.  

20.10. 2016 அன்று யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் மோட்டார் சைக்­கிளை செலுத்தி வந்த விஜ­ய­குமார் சுலக்சன் துப்­பாக்கி சூட்­டினால் மர­ண­ம­டைந்­தி­ருந்த நிலையில் அதன் பின்னர் ஏற்­பட்ட மோட்டார் சைக்கிள் விபத்­தினால் நட­ராஜா கஜன் என்­பவர் மர­ண­ம­டைந்­தி­ருந்தார் என்று நீதிவான் தனது மரண விசா­ரணை தொடர்­பான கட்­ட­ளையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

சான்­றுப்­பொ­ருட்கள் சமர்­பிப்பு

 குறித்த வழக்கு விசா­ர­ணையை மேற்­கொண்­டு­வரும் குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரிகள் நேற்­றைய தினம் வழக்­குடன் தொடர்­பு­பட்ட சான்­றுப்­பொ­ருட்­க­ளினை மன்றில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். அதா­வது துப்­பாக்கிக் பிரயோம் நடை­பெற்ற இடத்தில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட தடயப் பொருட்கள், இரத்த மாதி­ரிகள் மற்றும் சம்­பவ இடத்தில் மீட்­கப்­பட்ட துப்­பாக்கி ரவையின் வெற்­றுத்தோட்டாக்கள் போன்ற பதி­னெட்டு தட­யப்­பொ­ருட்­களை மன்றில் சமர்­பித்­தி­ருந்­தனர்.

 இதன்­போது தட­யப்­பொ­ருட்கள் உட்­பட இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் இது­வரை பூர்த்­தி­யாக்­கப்­ப­ட­வில்லை என மன்றில் குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நேரில் கண்ட சாட்­சியம் உண்டு

 வழக்கு விசா­ர­ணையின் போது பலி­யான மாண­வர்கள் சார்பில் மன்றில் முன்­னி­லை­யா­கிய சட்­டத்­த­ர­ணிகள் குறித்த சம்­பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்­சி­யங்கள் உள்­ள­தாக குறிப்­பிட்­ட­துடன் அச் சாட்­சி­யங்கள் அச்­சத்தின் கார­ண­மாக சாட்­சியம் அளிப்­ப­தற்கு மறுத்­தி­ருக்­கலாம் எனவும் எனவே அத்­த­கைய சாட்­சி­களின் பாது­காப்பை நீதி­மன்­றி­னூ­டாக உறு­திப்­ப­டுத்தி அவர்­க­ளது சாட்­சி­களை பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

 குறித்த சம்­பவம் இடம்­பெற்ற இடத்தில் மின்­சார நிலைய அலு­வ­லகம், வங்கி, வெதுப்­பக நிலையம் போன்­ற­வற்றில் சி.சி.ரி.வி.கம­ராக்கள் பொருத்­தப்­பட்டு உள்ள நிலையில் அவற்­றிலும் இவ் வழக்­குக்குத் தேவை­யான ஆதா­ரங்கள்  உள்­ள­டங்­கி­யி­ருக்­கலாம். எனவே அத்­த­கைய தக­வல்­களை விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் மன்­றா­னது கட்­ட­ளையை அறி­விக்க வேண்டும் என சட்­டத்­த­ர­ணிகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

 மேலும் கைதான பொலிஸார் ஒவ்­வொ­ரு­வ­ரது வாக்­கு­மூ­லங்­களும் மன்­றுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அவை ஒவ்­வொன்­றிலும் முரண்­பா­டான கருத்­துக்கள் காணப்­படும் நிலையில் அவை தொடர்பில் விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட வேண்டும் என சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

நீதி­வானின் பணிப்­புரை

 சட்­டத்­த­ர­ணி­களின் வாதங்­க­ளை­ய­டுத்து நீதி­வானால் பின்­வரும் பணிப்­பு­ரைகள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது,

 குறித்த சம்­பவம் தொடர்­பாக பொலி­ஸாரின் வாக்­கு­மூ­லத்தில் முரண்­பா­டான நிலை காணப்­ப­டு­கின்­றமை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வா­னது தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வேண்டும். இவற்றை விட பெறு­ம­தி­யான சாட்­சி­யங்கள் சான்­றுப்­பொ­ருட்­களை பதிவு செய்­வது தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு தக­வல்­களை சட்­டத்­த­ர­ணிகள் வழங்­க வேண்டும் என்று கட்­ட­ளை­யிட்­டி­ருந்தார்.

 அத்­துடன் குறித்த வழக்கு விசா­ர­ணையை எதிர்­வரும் பதி­னெட்டாம் திக­தி­வரை ஒத்­தி­வைத்­துடன் அது­வரை குறித்த ஜந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் வைக்க அநு­ரா­த­புரம் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ருக்கு நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

 இதேவேளை பலியான மாணவர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளான சயந்தன் மற்றும் கணேசராஜா ஆகியோர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற்ற இடத்தின் மாதிரி வரைபடத்துடன் மேலதிக சான்றுப் பொருட்கள், சாட்சியங்களை பதிவு செய்வது தொடர்பாக நீதிவானின் அனுமதிக்கேற்ப தகவல் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த விஜயகுமார் சுலக்சன் துப்பாக்கி சூட்டினால் மரணமடைந்திருந்த நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தினால் நடராஜா கஜன் மரணமடைந்திருந்தார் என யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் தனது மரண விசாரணை தொடர்பான கட்டளையில் குறிப்பிட்டிருந்தார்.