( எம்.எப்.எம்.பஸீர்)
தனது வயோதிபத் தாயை தலையில் உலக்கையால் தாக்கி மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று ( 17) பதிவாகியுள்ளது. பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேஸ்லைன் மாவத்தை - சிங்கஹ புர தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
38 வயதான மகளே இவ்வாறு தனது 65 வயது தாயை உலக்கையால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் 38 வயது மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான குறித்த மகளும், கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்ததாக கூறும் பொலிஸார், சந்தேக நபரின் 6 வயது மகளை 65 வயதான தனது தாய் தாக்கியமையை மையப்படுத்தி, 38 வயது மகளால் தாய் மீது உலக்கையால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான மகள், மன நல பாதிப்பு தொடர்பில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொண்ட நிலையில், ஒரு சில தினக்களுக்கு முன்னரேயே வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தரவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் சிந்தக பெரேராவின் ஆலோசப்னைக்கு அமைய பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில திஸாநாயக்கவின் வழி நடாத்தலில் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM