சிலி நாட்டில் பசுபிக் பெருங்கடலில் கரையொதுங்கி உயிருக்கு பேராடிய பாரிய திமிங்கலம் ஒன்றை பிரதேச வாசிகளும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எட்டு தொன் நிறையுடைய மின்கி திமிங்கலமொன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.

கரையொதுங்கி உயிருக்காக போராடிய திமிங்கலத்தை பிரதேசவாசிகள்  கயிற்றினால் கற்றி பாரிய சிரமத்துக்கு மத்தியில் கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னர் இதேபோன்று 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலி நாட்டில் கரையொதுங்கிய 65 அடி நீளமான நீல திமிங்கலம் ஒன்று 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டுச் சென்று காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு காப்பாற்றப்பட்ட திமிங்கலம்