மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

Published By: Digital Desk 5

17 Jul, 2022 | 09:01 PM
image

கடினமான காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர வைத்துவிடுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவச் சமூகத்திற்கான ஆதரவு எனும் தலைப்பில் மருத்துவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில், எரிபொருட்களைப் பெறுவதற்காக சாதாரண பொதுமக்களுடன் மருத்துவச் சமூகமும் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்கின்றது.

இந்நிலையில் பாரிய கடமைப் பழுவின் மத்தியிலும்  எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்க அதிபரின் அனுமதியுடனான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை சமூகத்தினருக்கு  எரிபொருள் நிரப்புவதற்கு சிலர் இடையூறாக இருந்தமையும் சமூக ஊடகங்களில் அவதூறாகவும் கருத்துக்களை உருவாக்குவதும் மிகவும் வேதனைக்குரியது.

வடபகுதியில் 1983ம் ஆண்டுகால அளவில் பல மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் நாட்டுப்பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்தனர்.

மிகவும் கடினமான முயற்சிகளின் பயனாகவே தற்போது யாழ் போதனா வைத்தியசாலை இலங்கையில் மிகவும் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் சேவையினை ஆற்றிவருகின்றது.

மிகவும் கடினமான இக்காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும்.

இதனால் பாரிய சமூக வெற்றிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது போன்று ஏற்படலாம். எனவே மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இக்கடினமான சூழலில் மருத்துவச் சமூகத்திற்கு ஆதரவு அளியுங்கள் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16