பொருளாதார, சமூக கட்டமைப்பின் சவால்களை வெற்றிக்கொள்ள இலங்கை பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளது

Published By: Ponmalar

04 Nov, 2016 | 08:18 PM
image

(ஹொங்கொங்கிலிருந்து எம்.எம்.மின்ஹாஜ்)

பொருளாதார துறைசார்ந்த சவால்களையும் சமூக கட்டமைப்பில் காணப்படும் சவால்களை வெற்றிக்கொள்வதற்காக பாரிய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை முன்னெடுத்து வருகின்றது. இதன்பிரகாரம் எதிர்காலத்தில் இலங்கை தேசத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

15 ஆவது ஜேர்மனிய வர்த்தகத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

15 ஆவது ஜேர்மனிய வர்த்தகத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இம்முறை ஹொங்கொங்கில் நடத்தப்படுகின்றது. 

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் கல்வி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களின் பாடசாலை கல்வியை 13 ஆம் தரம் வரைக்கும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அத்துடன் தொழில்நுட்ப துறை சார்ந்த திறன்களை வளர்முகப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது போன்ற இலங்கையின் சமூக அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கை தற்போதைய அராசங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்காலத்தில் மாபெரும் அபிவிருத்தி தரத்தை ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் அடைந்து கொள்ளும் . இந்நிலையில் இலங்கையானது பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. 

இதற்கிணங்க நாட்டின் சமூக கட்டமைப்பு சம்பந்தப்பட்ட சவால்களை வெற்றிக்கொள்ளவும் பொருளாதார சவால்களை முறியடிப்பதற்கும் முழு இலங்கையையும் டிஜிட்டல் மயப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் பல்கலைகழக மாணவர்களுக்கு இலவசமாக டெப் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று சலுகை அடிப்படையில் மடிக்கணணி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இலவச வை பை வலயங்கள் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே டிஜிட்டல் துறையின் நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்றார்.

இம்மாநாட்டின் போது டிஜிட்டல் துறை, பொருளாதார நெருக்கடிகள், முதலீடு செய்வதற்கான சூழலை உருவாக்கல், உற்பத்தி துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பெருமளவில் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08